Spotify நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை – 600 பேர் பணிநீக்கம்!!
முன்னணி ஊடக வளையொளி நிறுவனமான ஸ்பாட்டிபை (Spotify) சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் 6 சதவீத ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பணிநீக்க அறிவிப்பு
தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் வரையுள்ள பல்வேறு துறைகள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதிகரித்து வரும் செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளன. அந்த வகையில், இதுவரை அறிவிக்கப்பட்ட உலகளாவிய பணிநீக்கங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 50 ஆயிரங்களை தாண்டியுள்ளது. இருப்பினும் இந்த பணிநீக்க நடவடிக்கை இன்னும் குறைந்தபாடில்லை.
நாளை முதல் JEE நுழைவுத்தேர்வு துவக்கம் – 9 லட்சம் பேர் பங்கேற்பு!!
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த சூழலில், முன்னணி ஆடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாட்டிபை ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இந்நிறுவனம் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த ஆட்குறைப்பு எண்ணிக்கை ஒட்டுமொத்த ஊழியர்களில் 6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஸ்பாட்டிபை நிறுவனம் உலகளவில் 365 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்கள் மற்றும் 70 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் மற்றும் வலையொளிகளை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.