தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு சூப்பர் அறிவிப்பு – தாம்பரம் டூ நாகர்கோவில் அதிவேக சிறப்பு ரயில்!

0
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு சூப்பர் அறிவிப்பு - தாம்பரம் டூ நாகர்கோவில் அதிவேக சிறப்பு ரயில்!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு சூப்பர் அறிவிப்பு - தாம்பரம் டூ நாகர்கோவில் அதிவேக சிறப்பு ரயில்!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு சூப்பர் அறிவிப்பு – தாம்பரம் டூ நாகர்கோவில் அதிவேக சிறப்பு ரயில்!

தற்போது அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் பொது மக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பார்கள். இந்நிலையில் கூட்ட நெரிசலை தடுக்க அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ரயில்கள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்கள்:

தமிழகத்தில் இனி வரும் காலங்கள் முழுவதும் பண்டிகை கோலங்கள். எனவே வெளியில் வேலை பார்ப்பவர்கள் விழாக்களை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் நிலவி வருவதால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் அதிகம் கூடுவதன் மூலம் கொரோனா பரவும் விகிதம், அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்வதை தடுக்க பல்வேறு சலுகைகள் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் தமிழகத்தின் தென் மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இருக்கும் நிலையில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கழிக்க முயல்வார்கள். எனவே அவர்களின் வசதிக்காகவும் பண்டிகை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதத்தில் தாம்பரம் -நாகர்கோவில் -தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்டோபர் 13 ஆம் தேதி மற்றும் நவம்பர் 3ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் தாம்பரம் -நாகர்கோவில் (06003) அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தென்காசி டூ மாஸ்டர் பட வாய்ப்பு, தற்போது பிக் பாஸ் பிரபலம் – யார் இந்த சிபி?

குறிப்பிட்ட தினங்களில் இரவு 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 9:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.அதே போல் எதிர்திசையில் அக்டோபர் 17, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் -தாம்பரம் அதிவேக சிறப்பு ரயில் (06004) இயக்கப்பட உள்ளது.குறிப்பிட்ட நாட்களில் மாலை 4:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here