தென்காசி டூ மாஸ்டர் பட வாய்ப்பு, தற்போது பிக் பாஸ் பிரபலம் – யார் இந்த சிபி?

0
தென்காசி டூ மாஸ்டர் பட வாய்ப்பு, தற்போது பிக் பாஸ் பிரபலம் - யார் இந்த சிபி?
தென்காசி டூ மாஸ்டர் பட வாய்ப்பு, தற்போது பிக் பாஸ் பிரபலம் - யார் இந்த சிபி?
தென்காசி டூ மாஸ்டர் பட வாய்ப்பு, தற்போது பிக் பாஸ் பிரபலம் – யார் இந்த சிபி?

தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாஸ்டர் சிபி சாதாரணமாக தென்காசியில் இருந்து வந்து தற்போது குறைந்த நாட்களிலேயே அதிக பிரபலமடைந்துள்ளார். அவர் குறித்து இந்த பதிவில் காணலாம்.

மாஸ்டர் சிபி:

பிக் பாஸ் சீசன் 5 தொடக்கப்படுவதற்கு முன்பிருந்தே பல வதந்திகள் வரத்தொடங்கி இருந்தது. இவற்றை கடந்து வெற்றிகரமாக பிக் பாஸ் 5 பிரமாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் மீம் கிரியேட்டர்கள் மற்றும் ட்ரோல் செய்யும் நபர்கள் மிகவும் குஷியாகி விட்டனர். அவர்களுக்கு தினம் தினம் புது கன்டென்ட் கிடைக்கும் என்று ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில், அனைத்து வதந்திகளையும் பொய்யாகும் விதத்தில் இந்த முறை பலரும் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் இல்லாத நபர்களாக இறக்கப்பட்டுள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2 பிரபல சீரியல்கள் நிறுத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஒரு சிலர் மட்டுமே நன்கு அறியப்பட்ட முகங்களாக உள்ளனர். இந்த முறை முதலிலேயே 18 போட்டியாளர்களும் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி தொடங்கியது முதல் மிகவும் கலகலப்பாக சென்று வந்தது. ஆனால் 3ம் நாளில் இருந்து சச்சரவுகள் தொடங்கி விட்டது. பல வாக்குவாதங்களுக்கு நடிகர் சிபி தான் ஆரம்பமாக உள்ளார். இவரால் அதிக பரபரப்பு உண்டு என்பது தெரிகிறது. முதன்முதலில் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் பதவிக்கு இவர் நின்ற போது வாக்குகள் இவருக்கு கிடைக்கவில்லை.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்த ட்விஸ்ட் – ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்!

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள சாதாரண குடும்பத்தில் பிறந்து, எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து கால் தடம் பதித்துள்ளார். முதன்முதலாக கடந்த 2018ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் விசாகன் தயாரித்த படமான ‘வனஜாகர் உலகம்’ என்ற த்ரில்லர் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் தனது நடிப்பினால் பலரது பாராட்டுகளையும் பெற்றார். மேலும், மாஸ்டர் படத்தில் நடிகர் விஜயுடன் நடித்திருந்தார். கூடுதலாக பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ‘எதற்க்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here