இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்கா – மத்திய மந்திரி தகவல்!

0
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்கா - மத்திய மந்திரி தகவல்!
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்கா - மத்திய மந்திரி தகவல்!
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்கா – மத்திய மந்திரி தகவல்!

இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் பூங்கா உருவாக்கப்படும் என்று மத்திய சமூக நீதித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் பூங்கா:

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தில் தனித்து செயல்பட வேண்டும் என்று நோக்கில் அரசுகள் இலவச கல்வி, மாதந்தோறும் உதவித்தொகை அரசு பணிகளால் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் வயது வரம்புகளில் சலுகை ஆகியவற்றை வழங்குகிறது. அதனை தொடர்ந்து பொது இடங்களில் மாற்று திறனாளிகளுக்கென சில வசதிகளும் செய்யப்படுகிறது. அந்த வகையில் பேருந்துகளில் தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மாற்று திறனாளிகளுக்கான பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு, புவனேஸ்வர், கர்நாடகா ஆகிய இடங்களில் மாற்றுத்திறனாளர்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 9,520 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

அதன் தொடர்ச்சியாக தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் முதல் மாற்றுத்திறனாளி பூங்கா அமைய உள்ளது. அம்மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்கரி, சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சேவை செய்வதும் அரசின் திட்ட பலன்களை அனைவரும் பெறுவதை உறுதி செய்வதுமே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.

மேலும், மகாராஷ்டிராவின் முதல் மாற்றுத்திறனாளி பூங்கா நாக்பூரில் உருவாக்கப்பட உள்ளது. அதனை உருவாக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அமைச்சகம் வழங்கி வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த பூங்காவில் உணர்திறன் தோட்டம், நறுமணத் தோட்டம், திறன் பயிற்சி வசதி, விளையாட்டு மற்றும் தகவல் சார்ந்த வசதி உட்பட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல நவீன வசதிகள் இடம் பெற்றிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!