ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு சலுகை – மாநில முதல்வர் அறிவிப்பு!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு சலுகை - மாநில முதல்வர் அறிவிப்பு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு சலுகை - மாநில முதல்வர் அறிவிப்பு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு சலுகை – மாநில முதல்வர் அறிவிப்பு!

உத்திரப்பிரதேசத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மாதந்தோறும் தேவையான வீட்டு உபயோக பொருட்களை மானிய விலையில் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு உத்தரவிற்கிணங்க ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தையும் அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளி மாநில ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.

TN TRB தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் தகவல்!

அண்மையில் தகுதியற்றவர்கள் ரேஷன் கடைகள் வாயிலாக பயன் பெற்று வருவதால் விதிகளை மாற்ற போவதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த நேரத்தில் உத்திரபிரதேசத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தற்போது ஆயுஷ்மான் கார்டு இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவரிடமும் ஆயுஷ்மான் அட்டைகள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஆயுஷ்மான் கார்டு வழங்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆயுஷ்மான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக சிகிச்சை பெறலாம். மேலும் இதன் கீழ் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவச் சிகிச்சை பெறலாம். அதன்படி பொதுச் சேவை மையங்களில் ரேஷன் கார்டைக் காட்டி ஆயுஷ்மான் கார்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் வாயிலாகவும் ஆயுஷ்மான் கார்டை பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here