TN TRB தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் தகவல்!

0
TN TRB தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் தகவல்!
TN TRB தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் தகவல்!
TN TRB தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் தகவல்!

தமிழகத்தில் 2022 பிப்ரவரி மாதம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதற்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. அண்மையில் விண்ணப்பதாரர்கள் தாங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு:

தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை உடற்கல்வி இயக்குனர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை – 1 பதவிகளுக்கான தேர்வானது கணினி வழியில் நடைபெற்றது. சுமார் 190 தேர்வு மையங்களில் 2.30 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி ஆசிரியர் தேர்வாணையத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தமிழக பள்ளிக்கல்விதுறையில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் – அரசாணை 101 & 108 ரத்து?

அதனை தொடர்ந்து தமிழ் வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை ‘ஆம்’ என பதிவிட்ட விண்ணப்பதாரர்கள் தாங்கள் 10,11,12 ஆம் வகுப்பு முதல் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, கல்வியியல் படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை இணையதளத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் பணி நாடுநர்கள் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வரலாறு, புவியியல், இயற்பியல் உள்ளிட்ட 17 பாடங்களுக்கு 1:2 விகிதாசாரப்படி செப்டம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலும் இனச்சுழற்சி அடிப்படையிலும் தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 2,207 காலிப்பணியிடங்கள் கூடுதலாக 1,030 இடங்கள் அதிகரித்து மொத்தம் 3,237 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!