தமிழக பள்ளிக்கல்விதுறையில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் – அரசாணை 101 & 108 ரத்து?

0
தமிழக பள்ளிக்கல்விதுறையில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் - அரசாணை 101 & 108 ரத்து?
தமிழக பள்ளிக்கல்விதுறையில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் - அரசாணை 101 & 108 ரத்து?
தமிழக பள்ளிக்கல்விதுறையில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் – அரசாணை 101 & 108 ரத்து?

தமிழக பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அரசாணை 101 மற்றும் 108 ஆகிய இரண்டும் ரத்து செய்யப்பட உள்ளது. இதனால் சில முக்கிய விதிகளை மாற்றபட உள்ளது. அது என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

அரசாணை ரத்து:

தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் கொரோனாவுக்கு முன்பு இருந்தது போல நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை 101 மற்றும் 108 ஆகியவற்றை ரத்து செய்ய கோரிக்கைகள் எழுந்தது. கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதில் முக்கிய ஒன்று அரசாணை ரத்து இந்த அரசாணைகளால் ஆசிரியர்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்த வலியுறுத்தலின் படி இந்த 2 அரசாணைகளும் ரத்து செய்யப்பட்டு விட்டால் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.

புதிய மாற்றங்கள்:
  • 500 பள்ளிகளுக்கு ஒரு மாவட்ட கல்வி அலுவலர் என்ற வரையறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசாணை 145 வளாகப் பள்ளிகள் அரசாணை 202 குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் என வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.
Exams Daily Mobile App Download
  • அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் ஒரு உதவியாளர் ஒரு டைப்பிஸ்ட் ஒரு ஜூனியர் அசிஸ்டன்ட் என பணியிடம் உருவாக்கப்பட உள்ளது.
  • முதன்மை கல்வி அலுவலர் 2017 ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததைப் போல பார்வை அலுவலராக மட்டுமே செயல்பட உள்ளார்கள்.
  • தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரடியாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் அவர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்.
  • ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலருக்கும் இரண்டு கண்காணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு கண்காணிப்பாளருக்கு இரண்டு உதவியாளர்கள் என நியமிக்கப்பட உள்ளார்கள்.
  • ஆசிரியர்களின் பிரச்சினைகளை வட்டார கல்வி அலுவலர்களின் துணையோடு தீர்த்து வைப்பார் அவருக்கு உயர் அலுவலராக நேரடியாக தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்படுவார்.
  • தற்போது நடைமுறையில் உள்ள தொடக்க நடுநிலை உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீதான கண்காணிப்பு நீக்கப்படும்.
  • தமிழக பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அரசாணை 101 மற்றும் 108 ஆகிய இரண்டும் ரத்து செய்யப்பட உள்ளது. இதனால் சில முக்கிய விதிகளை மாற்றபட உள்ளது. அது என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!