தமிழகத்தில் விடுமுறை தினங்களில் வகுப்புகள்? CEO எச்சரிக்கை!

0
தமிழகத்தில் விடுமுறை தினங்களில் வகுப்புகள்? CEO எச்சரிக்கை!
தமிழகத்தில் விடுமுறை தினங்களில் வகுப்புகள்? CEO எச்சரிக்கை!
தமிழகத்தில் விடுமுறை தினங்களில் வகுப்புகள்? CEO எச்சரிக்கை!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அரசு விடுமுறை நாட்கள், சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தாமதமாக பள்ளிகள் தொடங்கப்பட்டது. அதனால் பொதுத்தேர்வுக்குரிய பாடங்களை நடத்தி முடிக்க அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டது. இது ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு மன சுமையை ஏற்படுத்தியது. அதனால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் விரைவில் தொடங்கப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன் கருதி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் காய்ச்சல் – தடுப்பு பணிகள் தீவிரம்!

இந்த நிலையில் திருப்பூரில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் பெறப்பட்டது. இதில் குறிப்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தொடர் வகுப்புகளால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும், இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்தடைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் இது தொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் விடுமுறை தினங்களில் பள்ளிகள் நடத்தப்பட கூடாது என்பது குறித்து ஏற்கனவே பள்ளி முதல்வர்கள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி விடுமுறை தினங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிப்பது கண்டிக்கத்தக்கது. அதனால் இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தகவல்கள் குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!