தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் காய்ச்சல் – தடுப்பு பணிகள் தீவிரம்!

0
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் காய்ச்சல் - தடுப்பு பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் காய்ச்சல் - தடுப்பு பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் காய்ச்சல் – தடுப்பு பணிகள் தீவிரம்!

இந்தியாவில் மழைக்காலம் தொடங்க இருப்பதால் நோய்கள் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் கூவம், அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி:

தமிழகத்தில் மழை தொடங்க இருப்பதால் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது மழை காலத்தில் தெருக்களில் மழை நீர் தேங்குவதால், அதன் மூலம் கொசுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் தொகை அதிகம் உள்ள பெரு நகரங்களில் நோய்க்கான வாய்ப்பு அதிகமாக இருக்க கூடும். இதன் காரணமாக அரசு சார்பில் கொசு மருந்து தெளிக்கும் பணி செயல்படுத்தப்படுகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகருக்கு ‘வாரிசு’ பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட அவமானம் – வைரலாகும் பதிவு!

அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு, அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் 10 படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி வருகிற 29ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் இந்த கொசு ஒழிப்பு பணியில் 1,262 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,621 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு, அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் மண்டலத்திற்கு 2 படகுகள் வீதம் 10 படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி வருகிற 29ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

தமிழக அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொது மக்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் அரசு தெரிவித்துள்ளது. அதாவது, வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ள டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பொருட்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு பொது மக்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுத்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!