புதிய ஆதார் அட்டை, திருத்தம் செய்ய நினைப்போருக்கான முக்கிய அறிவிப்பு – சிறப்பு முகாம் ஏற்பாடு!

0
புதிய ஆதார் அட்டை, திருத்தம் செய்ய நினைப்போருக்கான முக்கிய அறிவிப்பு - சிறப்பு முகாம் ஏற்பாடு!
புதிய ஆதார் அட்டை, திருத்தம் செய்ய நினைப்போருக்கான முக்கிய அறிவிப்பு - சிறப்பு முகாம் ஏற்பாடு!
புதிய ஆதார் அட்டை, திருத்தம் செய்ய நினைப்போருக்கான முக்கிய அறிவிப்பு – சிறப்பு முகாம் ஏற்பாடு!

இந்திய குடிமகன் என்பதற்கு முக்கிய காரணமாக இருந்து வரும் ஆதார் அட்டையை பிழை இல்லாமல் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில் புதிதாக ஆதார் அட்டை எடுக்க விரும்புவோர் மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய நினைப்போருக்கான சிறப்பு முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது குறித்தான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை:

அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெற ஆதார் கார்டு மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இத்தகைய ஆதார் கார்டில் புகைப்படம், முகவரி என அனைத்தையும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது. ஒருவேளை ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என நினைத்தால் உடனே அதற்குரிய அலுவலகத்தினை தொடர்பு கொள்ள வேண்டும். அந்த வகையில் தருமபுரி மாவட்டத் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. புதிதாக ஆதார் அட்டை எடுக்க நினைப்பவர்கள், ஆதார் அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய நினைப்பவர்கள் தலைமை அலுவலகத்திற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC 5831 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

மேலும், புதிதாக ஆதார் அட்டை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், அவரது பெயர், முகவரி, பிறந்த தேதி, கைபேசி எண் மற்றும் பாலின திருத்தம் இதில் ஏதோ ஒன்றில் திருத்தம் செய்ய விரும்பினால் ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும். புதிதாக ஆதார் அட்டை எடுக்க விரும்புவோர் மற்றும் திருத்தம் செய்ய நினைப்போர் கடவுச்சீட்டு, பான் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண ரசீது, சொத்து வரி ரசீது, வீட்டு வரி ரசீது, சமையல் எரிவாயு ரசீது ஆகிய ஆவணங்களில் ஏதோ ஒன்றை திருத்துவதற்காக கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் மற்றும் குழந்தைகள் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளை புதுப்பிக்க வேண்டும். இதற்கும் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

Exams Daily Mobile App Download

இது மட்டுமல்லாமல் பொம்மிடி, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அஞ்சல் அலுவலகம், அரூர், கடத்தூர், கம்பைநல்லூர், மாரண்டஅள்ளி, மொரப்பூர், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பொண்ணாகரம், பெரியானஅள்ளி, தீர்த்தமலை போன்ற துணை அலுவலகங்களிலும் தினமும் இத்தகைய முகாம்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புதிதாக ஆதார் அட்டை எடுக்க விரும்புவோர் மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய நினைப்போர் இத்தகைய முகாமில் கலந்து கொண்டு பயன் பெறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!