தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – முக்கிய தகவல் வெளியீடு!

0
தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – முக்கிய தகவல் வெளியீடு!

தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அதனால் பயணிகளின் வசதிகளுக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் பொதுவாக அதிக மக்கள் பேருந்து பயணங்களை மேற்கொள்வார்கள். அதனால் பண்டிகை, திருவிழா உள்ளிட்ட காலத்தில் பொதுமக்களுக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் வருகிற அக்டோபர் 4,5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் சென்னையில் இருக்கும் வெளியூர் மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். இதனால் பேருந்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும். அதன் காரணமாக பயணிகளுக்கிடையே கூட்ட நெரிசல் ஏற்படும்.

இதனை தவிர்க்கும் பொருட்டு தமிழக முதல்வர் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய இரு நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? யாருக்கு எவ்வளவு அகவிலைப்படி கிடைக்கும் – முழு விவரம் உள்ளே!

Exams Daily Mobile App Download

அத்துடன் சென்னையில் நாள் ஒன்றுக்கு 2100 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். இதனுடன் நாளை மற்றும் நாளை மறுநாள் கூடுதலாக 2050 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், அத்துடன் 1,650 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தாம்பரம் மெப்ஸ், பூவிருந்தவல்லி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!