தமிழகத்தில் ரயில்வே பணிக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் ரயில்வே பணிக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - தெற்கு ரயில்வே முக்கிய தகவல்!
தமிழகத்தில் ரயில்வே பணிக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - தெற்கு ரயில்வே முக்கிய தகவல்!
தமிழகத்தில் ரயில்வே பணிக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய தகவல்!

தமிழகத்தில் ரயில்வே பணி, வாங்கி தருவதாக கூறும் அங்கீகாரம் இல்லாத இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

முக்கிய தகவல்:

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசு பணிக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இந்த வகையில் அரசு வேலை அனைவரது வாழ்க்கை இலட்சியங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் கொரோனா காலகட்டத்தில் அரசு வேலை குறித்த அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. இருப்பினும் கொரோனா எழுச்சி குறைந்து வருவதால் மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே வேலைக்கு தயாராகி வருவோர்க்கு விழிப்புணர்வு பதிவை தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

சென்னைவாசிகள் கவனத்திற்கு – பிப்.16 முதல் புத்தக கண்காட்சி! நாளை டிக்கெட் முன்பதிவு!

இப்பதிவில் ரயில்வே வேலைக்கு செல்ல தயாராகி வருபவர்கள் அங்கீகாரம் இல்லாத இடைத்தரகா் மற்றும் நபா்களால் ஏமாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ரயில்வே ஆள்சோ்ப்பு வாரியம் தொடா்பான அறிவிப்பு குறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூா்வ வலைதளத்தை மட்டுமே பாா்வையிட வேண்டும். மேலும் போட்டி தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு , ரயில்வே பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறுபவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – PF பேலன்சை சரிபார்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

எனவே நியாயமற்ற வகையில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தொடர்ந்து ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி யாராவது பணம் கேட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் அல்லது ரயில்வே உதவி எண் 044 28213185 ஐ தொடர்பு கொள்ளலாம். இந்த வகையில் விண்ணப்பதாரர்கள், வேலை தேடுவோர் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!