சென்னைவாசிகள் கவனத்திற்கு – பிப்.16 முதல் புத்தக கண்காட்சி! நாளை டிக்கெட் முன்பதிவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் புத்தக கண்காட்சி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.
புத்தகக் கண்காட்சி
தமிழகத்தில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் ஜனவரி 23ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக இந்த புத்தக கண்காட்சியை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 3ம் அலையின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளதால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகளை திறக்க கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பிப்.14 வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் – ஆட்சியர் அறிவிப்பு!
அத்துடன் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு ரூ.100 கோடி மதிப்பில் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அதனால் புத்தக கண்காட்சியை விரைவில் நடத்த வ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதன்படி இந்த புத்தக கண்காட்சியை பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை நடத்தி கொள்ளலாம் என்று அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி புத்தக கண்காட்சியை நடத்துமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. புத்தக காட்சியில் கூட்ட நெரிசலை தவிர்க்க டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள இந்த புத்தக காட்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் https://bapasi.com/ என்ற இணையதளத்தில் சென்று டிக்கெட்டுகளை நாளை (பிப்.6) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். அத்துடன் நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும் என்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.