SBI கிரெடிட் கார்டு வாங்கினால் ஸ்மார்ட் வாட்ச் இலவசம் – அதிரடி அறிவிப்பு!

0
SBI கிரெடிட் கார்டு வாங்கினால் ஸ்மார்ட் வாட்ச் இலவசம் - அதிரடி அறிவிப்பு!
SBI கிரெடிட் கார்டு வாங்கினால் ஸ்மார்ட் வாட்ச் இலவசம் - அதிரடி அறிவிப்பு!
SBI கிரெடிட் கார்டு வாங்கினால் ஸ்மார்ட் வாட்ச் இலவசம் – அதிரடி அறிவிப்பு!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் நலன் கருதி புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது கிரெடிட் கார்டு வாங்கினால் ஒரு ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்படும் என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

SBI அதிரடி:

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதனால் பெரும்பாலான மக்கள் SBI வங்கியில் தங்களது கணக்கை தொடர்ந்து வருகின்றனர். மேலும் அரசுத்துறைகள் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் SBI வங்கியின் மூலமே நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய வங்கி தற்போது அதிரடியாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர்க்கு எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்!

அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பல்ஸ் என்கிற புதிய கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த கிரெடிட் கார்டு மூலம் மக்களின் தவிர்க்க முடியாத அன்றாட தேவைகளான மருத்துவம், எரிபொருள் சம்பந்தமான பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து இதர செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா செல்வது உள்ளிட்ட தேவைகளுக்கும் இந்த கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டிச.19 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 100+ நிறுவனங்கள் பங்கேற்பு!

இந்த கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக உபயோகப்படுத்துபவர்களுக்கு கிரெடிட் கார்டுக்கான ஆண்டு சந்தாவில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. உடல் நலத்தை மையமாக கொண்டு வெளியான இந்த கிரெடிட் கார்டின் ஆண்டு சந்தா விலையான ரூ.1,499 செலுத்தி வாடிக்கையாளர் ஆனால் ரூ.4,999 மதிப்புள்ள நாய்ஸ் கலர்பிட் பல்ஸ் (Noise Colorfit Pulse) ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்படும் என்று SBI தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!