Post Office வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறு சேமிப்பு திட்டங்களின் தற்போதைய வட்டி விவரம்!

0
Post Office வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சிறு சேமிப்பு திட்டங்களின் தற்போதைய வட்டி விவரம்!
Post Office வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சிறு சேமிப்பு திட்டங்களின் தற்போதைய வட்டி விவரம்!
Post Office வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறு சேமிப்பு திட்டங்களின் தற்போதைய வட்டி விவரம்!

போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டம் ஏழை மக்களுக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கும் நல்ல தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய வட்டி பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

வட்டி விவரம்:

மத்திய அரசின் தபால் நிலைய சிறு சேமிப்புத் திட்டங்கள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஏனென்றால் வங்கிகளுக்கு இணையாக அதிக வட்டி விகிதத்தை அஞ்சல் நிலையம் கொடுத்து வருகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் அதிகமாக நிதி நெருக்கடி ஏற்பட்டது, இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் அதிகமாக சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் வங்கிகளில் சிலர் முதலீடு செய்கின்றனர் மற்றும் சிலர் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கிரிப்டோ கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்கின்றனர்.

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!

ஆனால், தபால் நிலையங்களில் சேமிப்பது என்பது குறைவான ரிஸ்க் அதிகம் பாதுகாப்பு ஆகும். மேலும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செல்வ மகள் சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு சேமிப்பு திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. தபால் நிலையத்தில் மிகச் சிறிய தொகையை தொடர்ந்து சேமித்து பெரிய அளவில் முதிர்வு தொகை பெறலாம்.

தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உண்டா? இல்லையா? உண்மை நிலவரம்!

இந்நிலையில் தபால் நிலையத்தில், தபால் நிலைய சேமிப்பு கணக்கிற்கு 4 சதவீத வட்டி, ஒரு வருட டைம் டெபாசிட்டிற்கு 5.5 சதவீத வட்டி, இரண்டு வருட டைம் டெபாசிட்டிற்கு 5.5 சதவீத வட்டி, மூன்று வருட டைம் டெபாசிட்டிற்கு 5.5 சதவீத வட்டி, ஐந்து வருட டைம் டெபாசிட்டிற்கு 6.7 சதவீத வட்டி, ஐந்து வருட ரெக்கரிங் டெபாசிட்டிற்கு 5.8 சதவீத வட்டி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 4 சதவீத வட்டி, மாத வருமானத் திட்டதிற்கு 6.6 சதவீத வட்டி, தேசிய சேமிப்பு சான்றிதழ்க்கு 6.8 சதவீத வட்டி, பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டி, கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு 6.9 சதவீத வட்டி, செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கு 7.6 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!