தமிழ் திரையுலக நடிகரும், பாடகருமான மாணிக்க விநாயகம் மரணம் – உறவினர்கள் அஞ்சலி!

0
தமிழ் திரையுலக நடிகரும், பாடகருமான மாணிக்க விநாயகம் மரணம் - உறவினர்கள் அஞ்சலி!
தமிழ் திரையுலக நடிகரும், பாடகருமான மாணிக்க விநாயகம் மரணம் - உறவினர்கள் அஞ்சலி!
தமிழ் திரையுலக நடிகரும், பாடகருமான மாணிக்க விநாயகம் மரணம் – உறவினர்கள் அஞ்சலி!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகரும், குணசித்திர நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நிலை குறைபாடு காரணமாக நேற்று (டிச.26) உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மரணம்

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும், பாடகராகவும் அறியப்பட்டவர் மாணிக்க விநாயகம். கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரை தமிழ் சினிமாவில் முக்கியமான பின்னணி பாடகராக வளம் வந்து கொண்டிருந்தார். வித்தியாசமான குரல் வளம் கொண்ட இவரது பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பிரபலமானதாகும். மக்களிடம் இவர் ஒரு பாடகராகவும் அல்லாது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருடா திருடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் மக்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்தி கொண்டார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்கொலை செய்து கொண்ட இனியாவின் தோழி – சமூக பிரச்சனையை கையிலெடுத்த குழு!

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் சுமார் 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் இவர். இது தவிர ரன், தூள், பருத்திவீரன் மற்றும் சிங்கம் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ள குணசித்திர கதாப்பாத்திரம் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. சுமார் 1000 பக்திப் பாடல்களையும் நாட்டுப்புறப் பாடல்களையும் பாடியுள்ள இவர் பாடகராக நிறைய விருதுகளையும் இவர் வாங்கி குவித்திருக்கிறார்.

தனது தோழி நிலைமையை நினைத்து வருத்தப்படும் இனியா, அறிவுரை சொன்ன கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்நிலையில், தற்போது 78 வயதான பாடகர் மாணிக்க விநாயகம் உடல்நிலை குறைபாடு காரணமாக நேற்று (டிச.26) மரணமடைந்துள்ளார். இவரது இந்த திடீர் மரணம் சினிமா உலகினருக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. என்றாலும் அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் மாணிக்க விநாயகம் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவரது அக்கா உட்பட குடும்பத்தாரின் கண்ணீரும், புலம்பல்களும் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கி வருகிறது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here