எளிய முறையில் ஆதார் எண் மூலம் வங்கி இருப்பை தெரிந்து கொள்ளலாம் – முழு விவரம் இதோ!!

0
எளிய முறையில் ஆதார் எண் மூலம் வங்கி இருப்பை தெரிந்து கொள்ளலாம் - முழு விவரம் இதோ!!
எளிய முறையில் ஆதார் எண் மூலம் வங்கி இருப்பை தெரிந்து கொள்ளலாம் - முழு விவரம் இதோ!!
எளிய முறையில் ஆதார் எண் மூலம் வங்கி இருப்பை தெரிந்து கொள்ளலாம் – முழு விவரம் இதோ!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் இருக்கிறது. இந்நிலையில் ஆதார் எண் மூலமாக உங்களது வங்கி இருப்பை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

ஆதார் எண்:

தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) ஆதார் எண் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் எண் இருக்கிறது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் அரசின் நலத்திட்டங்களை பெறவும் ஆதார் எண் அவசியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் வங்கி சேவைகளை ஆதார் எண் மூலம் செய்யும் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி வங்கிக் கிளைக்கு செல்லாமல் உங்கள் வங்கிக் கணக்கு இருப்பை எளிய வழிமுறைகளை பயன்படுத்தி செய்து கொள்ளலாம்.

தமிழக பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு – பிப். 10ம் தேதி வரை சிறப்பு அனுமதி!

அதற்கு முதலில் நீங்கள் உங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்களுடன் இணைக்க வேண்டும். இந்த வசதி மூலம் இணைய வசதி இல்லாமலே ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி இருப்பை தெரிந்து கொள்ளலாம். இந்த வசதி மூத்த குடிமக்கள், ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பயனுள்ளதாக இருக்கும்

Follow our Instagram for more Latest Updates

வங்கி இருப்பை தெரிந்து கொள்ள எளிய வழிமுறைகள்:
  • உங்கள் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து *99*99*1# என்ற நம்பரை டயல் செய்ய வேண்டும்.
  • அதன் பின் ஆதார் அட்டையில் 12 இலக்க எண்ணை கொடுத்து தொடர வேண்டும்
  • ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிட்டு சரிபார்க்க வேண்டும்
  • அதன் பின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உங்களுக்குக் கணக்கு இருப்பை ஃபிளாஷ் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும்.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!