‘ராஜா ராணி’ சித்து தனது மனைவி பிறந்தநாளுக்கு கொடுத்த காஸ்ட்லி பரிசு – ரசிகர்கள் வாழ்த்து!

0
'ராஜா ராணி' சித்து தனது மனைவி பிறந்தநாளுக்கு கொடுத்த காஸ்ட்லி பரிசு - ரசிகர்கள் வாழ்த்து!
'ராஜா ராணி' சித்து தனது மனைவி பிறந்தநாளுக்கு கொடுத்த காஸ்ட்லி பரிசு - ரசிகர்கள் வாழ்த்து!
‘ராஜா ராணி’ சித்து தனது மனைவி பிறந்தநாளுக்கு கொடுத்த காஸ்ட்லி பரிசு – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி ” ராஜா ராணி 2″ சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்து தனது காதல் மனைவி ஸ்ரேயா பிறந்தநாள் அன்று பரிசாக கார் ஒன்றை பரிசளித்து இருக்கிறார்.

சித்து – ஸ்ரேயா ஜோடி:

சீரியல்களில் ஒன்றாகா நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பலர் இருக்கின்றனர். அவர்களில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் சித்து ஸ்ரேயா ஜோடி. இருவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற சீரியலில் ஒன்றாக நடித்து பின் காதலித்து வந்தனர். இந்த அழகான ஜோடிக்கு திருமணத்திற்கு முன்பே ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அந்த சீரியல் முடிந்த பின் விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் சித்து ஆல்யா மானசா உடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – TRP ஐ அதிகரிக்க மாஸ்டர் பிளான்!

மேலும் ஸ்ரேயாவும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அவர்களுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற திருமண புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியலில் இனிப்பு கடை வைத்திருக்கும் பயந்த சுபாவம் கொண்டவராக சித்து நடிக்கிறார். அவருடைய நடிப்பு திறமைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – குவியும் லைக்குகள்!

திருமணத்திற்கு முன்னதாக இருவரும் யூடுப் சேனல் ஒன்றை தொடங்கினார்கள். அதில் திருமணம் குறித்த அப்டேட் வந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் திருமணத்திற்கு பின் தனது காதல் மனைவி பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசாக கார் ஒன்றை வழங்கி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சித்து ஸ்ரேயா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!