தமிழ் சீரியல் காதல் ஜோடிகளின் பள்ளி பருவ புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்!
தமிழ் சின்னத்திரையில் அழகான காதல் ஜோடியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சித்து – ஸ்ரேயா ஜோடி. இருவரின் பள்ளி பருவ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல ஜோடி:
தமிழில் சின்னத்திரையில் நடித்து பின் காதலில் விழுந்து திருமணம் ஆனவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அழகிய காதல் ஜோடி தான் சித்து ஸ்ரேயா. அவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர்கள். அந்த சீரியலில் ஜோடியாக நடித்ததன் மூலமாக அவர்கள் காதலித்தனர். சின்னத்திரையில் பல விளம்பரங்கள், நிகழ்ச்சிகளில் ஒன்றாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்கள்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அம்மாவுடன் இணைந்த மீனா – வைரல் வீடியோ! குவியும் லைக்குகள்!
கடந்த மாதம் அவர்கள் பிரம்மாண்டமாக பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. தற்போது சித்து விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல ஸ்ரேயா ஜீ தமிழ் ரஜினி சீரியலில் நடித்து வருகிறார். இருவரும் இந்த சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதனால் அவர்களது திருமண வாழ்க்கையை தாண்டி நடிப்பு திறமைக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
சன் டிவி “ரோஜா” சீரியலில் களமிறங்கிய புது வில்லி – அர்ஜுன் எடுத்த முடிவு! ப்ரோமோ ரிலீஸ்!
இந்நிலையில் சமீபத்தில் சித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் சித்து மற்றும் ஸ்ரேயாவின் பள்ளி பருவ புகைப்படங்கள் இருக்கிறது. அதில் இருவருமே அடையாளம் தெரியாமல் இருக்கின்றனர். இந்த அழகான ஜோடியின் அழகான குழந்தைப்பருவ புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.