“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அம்மாவுடன் இணைந்த மீனா – வைரல் வீடியோ! குவியும் லைக்குகள்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தினமும் சில குட்டி சண்டைகளுடன் கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீனாவும், அவரது அம்மாவும் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மனம் கவர்ந்த குடும்ப சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்தாலும் புதிதாக வந்துள்ள மருமகள்களால் அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் சின்ன சின்ன பிரச்சனை என்பதால் அதை எல்லாம் அடுத்த நாளே மறந்துவிட்டு வழக்கமான வேலைகளை செய்கின்றனர். அதுவே இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தனி சிறப்பு.
சன் டிவி “ரோஜா” சீரியலில் களமிறங்கிய புது வில்லி – அர்ஜுன் எடுத்த முடிவு! ப்ரோமோ ரிலீஸ்!
இதுவரை வில்லத்தனம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் தமிழ் சீரியல் என்ற பெருமை இந்த சீரியலுக்கு உள்ளது. இந்நிலையில் நிஜ குடும்பம் போலவே இந்த சீரியலில் அனைத்து சடங்குகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அதனால் ஏகப்பட்ட குடும்ப ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் அடுத்ததாக கடை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சிறிய கடை தொடங்கி தற்போது சொந்தமாக பெரிய கடை தொடங்க இருக்கின்றனர்.
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸின் புதிய முல்லை இவர் தானா? உண்மை நிலவரம் இதோ! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் விறுவிறுப்பான கதை இருப்பதால் படப்பிடிப்பு தளம் பரபரப்புடன் இருக்கும். அதில் சிறிது இடைவெளியில் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா மற்றும் அவரது அம்மாவாக நடிப்பவர் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அதில் இருவரும் நடனம் ஆடி இருக்கின்றனர். இந்த வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.