வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி அளித்த தங்கம் விலை – இல்லத்தரசிகள் ஷாக்!

0
வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி அளித்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் ஷாக்!
வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி அளித்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் ஷாக்!
வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி அளித்த தங்கம் விலை – இல்லத்தரசிகள் ஷாக்!

தங்கத்தில் முதலீடு என்பது இன்றளவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வாரத்தின் முதல் நாள் ஆன இன்று (26-09-2022) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. இவ்வாறு தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதால், மக்கள் மத்தியில் தங்கம் வாங்குவதற்கு பெரும் தயக்கம் நிலவி வருகிறது.

தங்கத்தின் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் பெரிதும் இறக்கமே காணப்பட்டு வந்தது. இந்நிலையில் எப்போது தங்கம் விலை 36 ஆயிரத்துக்குக்கு கீழ் வரும் என மக்கள் எதிர்பார்க்கும் வேளையில் இன்று விலை சற்று உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் நாள் ஆன இன்று விலை ஏற்றத்துடன் இருப்பதால், வரும் நாட்களில் இதன் விலை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

அரசு பள்ளிகளில் விரைவில் 18,000 ஆசிரியர்கள் நியமனம் – முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!

சென்னையில் இன்று (செப்டம்பர் 26) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,651 ஆக சற்று உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,650 ரூபாயாக இருந்தது. அதேபோல, சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.37,208ஆக விற்கப்படுகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு கிராம் ஒன்றுக்கு 80 பைசா குறைந்து ரூ.60.70ஆகவும், கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.60,700 ஆகவும் விற்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

கோவை, திருச்சி, வேலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் தங்கத்தின் விலை ரூ.4,651ஆக விற்கப்படுகிறது. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம், பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி வீதம் உயர்வு குறித்த அறிவிப்பு வரும் வரை தங்கத்தின் விலையில் நிலையற்ற போக்கு காணப்படும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரு அறிவிப்புகளும் இந்த வாரம் வெளியாகும் போது, உலகப் பங்குச்சந்தையிலும் தங்கம் விலையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!