தமிழக அரசு துறைகளில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் காலி – உடனடியாக நிரப்ப கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பல காலிப்பணியிடங்கள் இருப்பதாக தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
காலிப்பணியிடங்கள் அறிவிப்பு:
தமிழக அரசுத் துறைகள் மக்களின் நலனிற்காக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசுத் துறைகளில் பல காலி பணியிடங்கள் இருப்பதாகவும், அவை இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் பல காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி அளித்த தங்கம் விலை – இல்லத்தரசிகள் ஷாக்!
மேலும் இந்த காலி பணியிடங்களை நிரப்ப அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் 75-வது பவள விழாவையொட்டி மண்டல கூட்டத்தில் இது குறித்து அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் பதிவுத்துறை, வருவாய் துறை, மருத்துவ துறை, வேளாண்மை துறை என பல அரசு துறைகளில் சுமார் ஒன்றரை லட்சம் உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்தார்.
Exams Daily Mobile App Download
குறிப்பாக பல மாவட்டங்களில் இயங்கி வரும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் குறைவான பணியாளர்களை வைத்து வேலை வாங்குவதால் அதிக வேளை பளு இருப்பதால் பணியாளர்கள் சிரமத்தில் இருக்கின்றனர். மேலும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களுக்கு தொழில் வரி பிடித்தம் செய்யப்பட கூடாது என தெரிவித்தார். அவ்வாறு செய்தால் அவர்களின் சம்பளத்திற்கு ஏற்றபடி தொழில் வரியை பிடித்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும் இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அனைத்து துறைகளும் கணினிமயமாக்கப்படும் என தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதனால் 2 லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்