Jio Phone வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் – அதிகரித்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை!

0
Jio Phone வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் - அதிகரித்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை!
Jio Phone வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் - அதிகரித்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை!
Jio Phone வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் – அதிகரித்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை!

ஜியோ நிறுவனம் அதன் போனின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலையை அதிகரித்துள்ளது. ஜியோ போனை 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விலையேற்ற அனைத்து ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் விலை உயர்வு:

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் எகனாமிக் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ரிலையன்ஸ் ஜியோ அதன் ஜியோ போனின் விலையை 20% வரை அதிகரித்துள்ளது. மேலும் அறிக்கையின்படி, நிறுவனம் 10 கோடிக்கும் அதிகமான ஜியோ போன் பயனர்களைக் கொண்டுள்ளது. தற்போது அதன் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.155 பிளானின் விலை ரூ.186 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 28 நாள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.185 பிளானின் விலை ரூ.222 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் தினமும் 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இதேபோல் 336 நாள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.749 பிளானின் விலை தற்போது ரூ.899 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.ஜியோ போனை வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.1999, ரூ.1499 மற்றும் ரூ.749 ஆகிய 3 பேக்குகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து வாங்கலாம். இதில் ரூ.749 திட்டத்தின் விலையை மட்டும் தற்போது அந்த நிறுவனம் ரூ.899 ஆக உயர்த்தி உள்ளது. இந்த சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Ford India சென்னையில் அருமையான வேலை தயார் – BE / B.Tech முடித்தவர்க்கு பணி வாய்ப்பு..!

மேலும் புதிய Jio Phone வாங்க வேண்டுமென்றால், இனி கூடுதல் பணத்தை செலுத்த வேண்டும். இத்துடன் வரம்பற்ற 1 ஆண்டு திட்டமும் வழங்கப்படும். வரம்பற்ற குரல் அழைப்பு உள்பட, ஆண்டு முழுவதும் மொத்தம் 24 ஜிபி டேட்டாவைக் கொண்டுள்ளது. ஜியோ ஆப் களுக்கு இலவச அணுகலும் கிடைக்கும். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்ட் பிளான்களின் விலைகளை விரைவில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாம். இந்த ஆண்டு தீபாவளிக்குள் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!