TCS நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் – விரைவில் முடிவுக்கு வரும் WFH முறை?

0
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் - விரைவில் முடிவுக்கு வரும் WFH முறை?
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் - விரைவில் முடிவுக்கு வரும் WFH முறை?
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் – விரைவில் முடிவுக்கு வரும் WFH முறை?

கொரோனா முழு ஊரடங்கு காலங்களில் அனுமதிக்கப்பட்ட வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை திரும்ப பெற TCS நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்நிறுவன ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட இருக்கின்றனர்.

WFH முறை

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் முன்னணி IT நிறுவனங்கள் பலவும், தங்களது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைக்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் சமீபத்தில் தனது 6 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களில் 20 சதவீதம் பேர் மட்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்திற்கு வெளியே இருந்து பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளது. ஏனெனில் இந்த நிறுவனம், தற்போது ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு திரும்புவதை எதிர்பார்க்கிறது.

Exams Daily Mobile App Download

அதாவது, வரும் 2025ம் ஆண்டிற்குள் ஒரு கட்டமைக்கப்பட்ட ஹைப்ரிட் வேலை மாதிரியை செயல்படுத்த TCS திட்டமிட்டுள்ள நிலையில், இப்போது வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை தளர்த்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், தற்போதைக்கு நிறுவனம், கொரோனா தொற்று நோய்க்கு முந்தைய நிலைகளை அடையும் வரை அல்லது குறைந்தபட்சம் 80 % வரை நிலைமை சீராவதை முன்னிட்டு ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதை ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பொது மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – முதல்வர் வெளியிட்ட பதிவு!

இது குறித்து அவர் கூறுகையில், ‘TCS நிறுவனத்தின் 25/25 திட்டம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கான பாதை, முதலில் மிகவும் இயல்பான பணிச்சூழலுக்கு திரும்புவதும், பின்னர் நிரந்தர கலப்பின மாதிரியைப் பெறுவதும் ஆகும். நாங்கள் முன்னோக்கிச் செல்லும் போது, எங்கள் வழக்கமான புள்ளிவிவரங்களை மீண்டும் கொண்டு செல்வோம். இனி ஒவ்வொரு மாதமும் அதில் நிலையான முன்னேற்றத்தை காண வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதனால் டிசிஎஸ், இன்னும் ஒரு சில மாதங்களில் தனது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைக்கலாம் என்று கருதப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!