தமிழக பொது மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – முதல்வர் வெளியிட்ட பதிவு!

0
தமிழக பொது மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் - முதல்வர் வெளியிட்ட பதிவு!
தமிழக பொது மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் - முதல்வர் வெளியிட்ட பதிவு!
தமிழக பொது மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – முதல்வர் வெளியிட்ட பதிவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில், அரசு ஒரு சில கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா இன்னும் முற்றிலும் குறையவில்லை என்பதால் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் ஒரு நாள் பாதிப்பு 3000யை நெருங்கி இருக்கிறது. அதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன் படி கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது என மக்கள் சாதாரணமாக இருக்க கூடாது என அவ்வப்போது அரசு எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் கொரோனா பரவலை குறைக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே வழி என்பதால் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்தியாவில் NEET தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதில் கோவிட் தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதை உணர்ந்து நம்மை பாதுக்காக்கும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் நேற்று நடந்த கோவிட் மெகா தடுப்பூசி முகாம்களில் 17,55,364 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதனால் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் விரைவில் செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!