“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – வெளியான வீடியோ!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா - வெளியான வீடியோ!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – வெளியான வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சீரியலில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு வெளி ஊருக்கு ஷாப்பிங் சென்று அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

நடிகை ஹேமா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மனம் கவர்ந்த ஒரு குடும்ப சீரியல் ஆகும். இன்றைய காலகட்டத்தில் மக்கள் கூட்டு குடும்பத்தை பார்க்காத நிலையில் அவர்களுக்கு கூட்டு குடும்பம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என காட்டுவதால் இந்த சீரியல் மாபெரும் வெற்றி அடைந்து இருக்கிறது. இந்த சீரியலில் இரண்டாவது அண்ணனின் மனைவியாக நடிப்பவர் தான் நடிகை ஹேமா. அவரை ஹேமா என்று சொல்வதை விட மீனா என சொன்னால் தான் மக்களுக்கு தெரியும், அந்த அளவிற்கு பிரபலமானவர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் – ரசிகர்கள் ஷாக்!

அவர் ஹேமா டைரி என்ற யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் குழந்தை வளர்ப்பு, கர்ப்பகால குறிப்புகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் செட், அவரது மகனின் குறும்புத்தனங்கள் போன்றவற்றை வீடியோவாக பதிவிடுவார். சமீபத்தில் தனது மகனின் முதல் மொட்டை திருப்பதி சென்று போட்டு அதை வீடியோவாக பதிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் சீரியலில் பிசியாக இருந்தாலும் டி நகர் சென்று ஷாப்பிங் செய்து இருக்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் – ரசிகர்கள் ஷாக்!

அது குறித்த வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். தற்போது சீரியலில் கயலுக்கு மொட்டை போட்டு காது குத்தும் விழா நடைபெறுகிறது. அதனால் சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. மீனா கதாபாத்திரம் அடிக்கடி சண்டையிடும் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம் போல காட்டப்பட்டாலும் கடைசியில் நகைச்சுவையாகவும், குடும்பத்தை விட்டு கொடுக்காத மருமகளாக இருப்பதால் அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!