தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 24 பேர் – தமிழக அரசு அறிக்கை!

0
தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 24 பேர் - தமிழக அரசு அறிக்கை!
தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 24 பேர் - தமிழக அரசு அறிக்கை!
தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 24 பேர் – தமிழக அரசு அறிக்கை!

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பாதிப்புகளின் தினசரி நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. அதில், பல மாநிலங்களில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இன்னும் ஒரு சில மாநிலங்களில் மட்டும் நோய் பரவல் பாதிப்பு சற்று அதிகரித்த நிலையில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக அகலும் வரை வாரம் தோறும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை கடந்த 24 மணி நேர நிலவரப்படி, அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

வவ்வால் மாதிரிகளில் இருந்து நிபா வைரஸ் தடுப்பு மருந்து – கேரளா சுகாதாரத் துறை தகவல்!

அதன்படி, இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,624 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,62,177 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 24 பேர் தோற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35,550 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மாதிரி எண்ணிக்கை 1,51,132 ஆகும். இதுவரை மாநிலம் முழுவதும் மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4,59,32,367 ஆக உள்ளது.

அக்.1 முதல் ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம் – மத்திய அரசு உத்தரவு!

தமிழகம் முழுவதும் இன்று தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவரக்ளின் எண்ணிக்கை 1,639 பேர். இதுவரை மொத்தம் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் 26,09,435 பேர் ஆகும். சென்னையில் இன்று 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 40924 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25225 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 8136 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருப்பதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!