TNUSRB PC தேர்வரா நீங்கள்? ‘இதற்கு’ செப்.14 தான் இறுதி நாள்!

0
TNUSRB PC தேர்வரா நீங்கள்? 'இதற்கு' செப்.14 தான் இறுதி நாள்!
TNUSRB PC தேர்வரா நீங்கள்? 'இதற்கு' செப்.14 தான் இறுதி நாள்!
TNUSRB PC தேர்வரா நீங்கள்? ‘இதற்கு’ செப்.14 தான் இறுதி நாள்!

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச நேரடி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலவச நேரடி வகுப்பு

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக சுமார் 3000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தேர்வுக்கான இலவச நேரடி வகுப்புகள் அரசு சார்பாக நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசின் குடிமைப்பணிகள் பயிற்சி மையத் தலைவரும், தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயர் கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி உள்ளிட்ட மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள www.civilservicecoaching.com என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் பயிற்சி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் NEET தேர்வு மாணவர்களுக்கான புதிய ஏற்பாடு – அமைச்சர் அறிவிப்பு!

மேலும் இந்த பயிற்சி வகுப்பில் இணைய விரும்பும் நபர்கள் வருகிற செப்டம்பர் 14ம் தேதிக்குள் தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 044 – 24621475 மற்றும் 24621909 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதற்கு முன்னதாக அரசு சார்பில் TNPSC-இன் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் 440 தேர்வர்கள் பயன் அடைந்துள்ளனர். அதனால் இந்த முறையும் இந்த கட்டணமில்லா இலவச நேரடி வகுப்பை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!