தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – எளிய முறையில் வினாத்தாள்! சூப்பர் உத்தரவு!

0
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - எளிய முறையில் வினாத்தாள்! சூப்பர் உத்தரவு!
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - எளிய முறையில் வினாத்தாள்! சூப்பர் உத்தரவு!
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – எளிய முறையில் வினாத்தாள்! சூப்பர் உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடத்த உயர்கல்வித்துறை உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதனை தொடர்ந்து எளிமையான வினாத்தாள் வடிவமைக்க கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

எளிய வினாத்தாள்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த செப்.1ம் தேதி பல்வேறு கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக அரசின் பல்வேறு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

SBI வங்கி கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அரசின் இத்தகைய அறிவிப்பை தமிழகத்தின் பல பகுதிகளிலும் கல்லூரி மாணவர்கள் எதிர்த்து வந்தனர். அதாவது கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. மேலும் கடந்த ஆண்டுக்கான அனைத்து பருவத் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான பருவத் தேர்வு பாடப்பகுதிகளும் இதுவரை ஆன்லைன் முறையிலே நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகளால் சிலர் ஆன்லைன் வகுப்பு கவனிக்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

சினிமா டிக்கெட் விற்பனையில் புதிய விதிமுறைகள் – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

அதனால் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்துமாறு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்கு வழங்கப்படும் வினாத்தாளை எளிதான முறையில் வடிவமைக்குமாறு கல்லூரி கல்வி இயக்குநர் அனைத்து பல்கலைக்கழகங்களையும் வலியுறுத்தியுள்ளார். அதனால் மாணவர்கள் சிரமமின்றி இந்த நேரடி பருவத் தேர்வுகளை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். அரசின் இத்தகைய முடிவு மாணவர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!