SBI வங்கி கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
SBI வங்கி கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
SBI வங்கி கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
SBI வங்கி கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

பாரத ஸ்டேட் வங்கி வங்கிக் கணக்கில் உங்கள் மொபைல் எண்ணை பத்தி செய்வது மற்றும் அப்டேட் செய்வது போன்ற வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. இவற்றை பல்வேறு வழிமுறைகளில் எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி கணக்கு:

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகள் எளிதாக கிடைக்கும் வகையில் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நேரடியாக வங்கி கிளைகளுக்கு செல்லாமல் எளிதாக வீட்டில் இருந்த படியே சேவையை தொடர்வதற்கும் பல அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. சேமிப்பு வங்கிக் கணக்கில் உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்பட்டிருந்தால், அனைத்து பரிவர்த்தனைகளையும் நாம் அதன் மூலமாகவே கவனிக்க முடியும். மேலும், உங்கள் வங்கிக் கணக்கில் மற்றவர்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முயலும் போது அறிவுறுத்தப்படும்.

மத்திய அரசு சார்பில் ரூ.1000 உதவித்தொகையுடன் சுருக்கெழுத்து, கணினி பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்டர்நெட் பேங்கிங் வசதியைப் பெற, உங்கள் மொபைலை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சேமிப்பு வங்கிக் கணக்கில் பதிவு செய்திருப்பது கட்டாயம். உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால், அதனை மூன்று வழிகளில் மேற்கொள்ளலாம்.

இன்டர்நெட் பேங்கிங் மூலம் மொபைல் எண்ணை பதிவு செய்யும் முறை:
  • முதலில், www.onlinesbi.com என்ற இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்.
  • அதில், “சுயவிவரம்-தனிப்பட்ட விவரங்கள்-மொபைல் எண்ணை மாற்று” என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். இப்பொழுது, “எனது கணக்குகள்” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக தோன்றும் பக்கத்தில், உங்கள் கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்து, மொபைல் எண்ணை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணின் கடைசி 2 இலக்கங்கள் உங்கள் திரையில் தோன்றும்.
  • இப்பொழுது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்களுக்கு உறுதி செய்யப்படும்.
  • நேரடியாக எஸ்பிஐ கிளை மூலம் மொபைல் எண்ணை பதிவு செய்யும் முறை:
  • உங்கள் அருகிலுள்ள SBI கிளைக்குச் சென்று, மொபைல் எண் பதிவு செய்வதற்கான கோரிக்கை கடிதத்தினை நிரப்பி அலுவலகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேவையான சரிபார்ப்புக்குப் பிறகு, வங்கி உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து விடும். இது குறித்த செய்தி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பப்படும்.
எஸ்பிஐ ஏடிஎம் மூலம் மொபைல் எண்ணை அப்டேட் செய்யும் முறை:
  • உங்கள் அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில், விவரங்கள் பதிவு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்கள் ஏடிஎம் பின்னை உள்ளிட வேண்டும்.
  • பின்னர், மொபைல் எண் பதிவு விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, மொபைல் எண்ணை மாற்று விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • உங்கள் பழைய மொபைல் எண்ணை உள்ளிட்டு அதை உறுதி செய்ய வேண்டும்.
  • புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு அதை உறுதி செய்ய வேண்டும்.
  • புதிய மற்றும் பழைய மொபைல் எண்களுக்கு வெவ்வேறு OTPகள் அனுப்பப்படும்.
  • புதிய மற்றும் ஏற்கனவே உள்ள மொபைல் எண்ணிலிருந்து SMS மூலம் பெறப்பட்ட OTP மற்றும் ஆதார் எண்ணை IOTP மதிப்பு + REF எண்ணை 567676 க்கு 4 மணி நேரத்திற்குள் அனுப்ப வேண்டும்.
  • இப்பொழுது உங்கள் மொபைல் எண் அப்டேட் செய்யப்பட்டு விடும்.
அப்டேட் தொடர்பான கோரிக்கை சரிபார்க்கும் முறை:
  • இணையத்தின் வழியாக எஸ்பிஐ முகவரிக்கு செல்ல வேண்டும்.
  • அதில், ‘சுயவிவரம்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, ‘தனிப்பட்ட விவரங்கள்’ இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இந்த திரையில், உங்களின் பெயர், மின்னஞ்சல் ஐடி மற்றும் இணைய வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்றவை காண்பிக்கப்படும்.
  • இப்பொழுது அங்கு உள்ள ‘Change Mobile Number-Domestic only (Through OTP/ATM/Contact Centre)’ என்ற இணைப்பை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது தோன்றும் திரையில், ‘Status’ என்பதை தேர்வு செய்து உங்களின் விண்ணப்ப நிலையினை தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!