சினிமா டிக்கெட் விற்பனையில் புதிய விதிமுறைகள் – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

0
சினிமா டிக்கெட் விற்பனையில் புதிய விதிமுறைகள் - மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!
சினிமா டிக்கெட் விற்பனையில் புதிய விதிமுறைகள் - மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!
சினிமா டிக்கெட் விற்பனையில் புதிய விதிமுறைகள் – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் சினிமா டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்வது, நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெறுவது உள்ளிட்டவைகளை தவிர்க்கும் விதமாக அரசு சார்புடைய ஆன்லைன் தளத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சினிமா டிக்கெட்:

மக்கள் அனைவரும் விரும்பி தங்களது நேரத்தை செலவிடும் நல்ல பொழுதுபோக்கு சினிமா தான். அத்தகைய படங்களை காண வழங்கப்படும் டிக்கெட்டுகள் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த சினிமா டிக்கெட்டுகள் பெறுவதற்கு திரையரங்குகளின் டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் சில சமயம் ஏற்படும். மேலும் ஒரு சில திரையரங்குகளில் பிளாக்கில் கூடுதல் கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதும் உண்டு.

தமிழக அரசு ஆசிரியர்கள், ஊழியர்களின் மாத சம்பள பட்டியல் – சர்வர் பிரச்சனையால் சிக்கல்!

இத்தகைய நிகழ்வுகளை தடுக்கும் விதமாக ஆந்திராவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமா டிக்கெட்டுகளின் கட்டணத்தை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் என குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டணத்தை வகுத்துள்ளது. அந்த கட்டணங்களை குறைந்த கட்டணம் என்று திரைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்தகைய எதிர்ப்பை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கண்டுகொள்ளவில்லை. இதனால் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்கள் தவித்து வருகின்றன.

தமிழகத்தில் நவ.28 வரை கனமழை நீடிக்கும், மீனவர்களுக்காக எச்சரிக்கை – வானிலை அறிக்கை!

இந்நிலையில் ஆந்திராவில் சினிமாஸ் ஒழுங்குமுறை திருத்தச்சட்டம் 2021 சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த திருத்தம் கடந்த நவ.12ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. அதன்படி அனைத்து திரையரங்குகளும் சினிமா டிக்கெட்டுகளை அரசு சார்ந்த ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். நேரடியாக விற்பனை செய்ய கூடாது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த டிக்கெட்டுகளை மொபைல் மற்றும் இணையதளம் வாயிலாக பெற முடியும். இத்தகைய முடிவு திரையரங்குகளில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளை தடுக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!