சீரியல் நடிகை ரேஷ்மா, மதன் ஜோடிக்கு திருமண வாழ்த்து சொன்ன பிரபல நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்!
ஜீ தமிழ் சீரியல்களில் ஒன்றாக நடித்து பின் காதலித்து கடந்த 15 ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட ரேஷ்மா, மதன் ஜோடிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர் சிம்பு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரேஷ்மா, மதன் திருமண வாழ்த்து:
சின்னத்திரை நடிகை, நடிகர்கள் காதலித்து திருமணம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஜீ தமிழ் “பூவே பூச்சூடவா” சீரியலில், கதாநாயகியாக அறிமுகமாகிய ரேஷ்மாவிற்கு அதே சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்த மதன் உடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் பழகி வந்த நிலையில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. புத்தாண்டு அன்று இருவருக்கும் இடையே உள்ள காதலை ரசிகர்களிடம் உறுதிபடுத்தினார் ரேஷ்மா. இந்நிலையில் அவர்களது காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இருவீட்டார் சமமதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.
கோதைக்கு உதவி செய்யும் பாக்கியா, விருந்து நடக்கும் அதிர்ச்சியில் லேகா – வெளியான மெகா சங்கமம் ப்ரோமோ!
மேலும் திருமணம் குறித்து ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி எங்கள் இருவரின் குடும்பத்தின் ஆசியோடு நாங்கள் திருமணம் செய்துக்கொள்ள போகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. எங்களின் இந்த இனிய பயணத்திற்கு உங்களின் ஆசிகள் எப்போதும் வேண்டும். அன்புடன் மதன் மற்றும் ரேஷ்மா” என்று குறிப்பிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
‘பாரதி கண்ணம்மா’ பரினா & அஞ்சலிக்கு பிறந்த ஆண் குழந்தை – கலாய்க்கும் நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்!
அவர்களது திருமணம் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களின் வாயிலாக திருமண வாழ்த்துக்களை பதிவுகள் மூலமாகவும், கமெண்ட்கள் மூலமாகவும் வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமண ஜோடிக்கு பிரபல நடிகர் சிம்பு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இவர்கள் இருவருக்கும் வீடியோ கால் மூலம் திருமண வாழ்த்து தெரிவித்ததாக பதிவிட்டிருந்தார்.