பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் திடீர் உயர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

0
பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் திடீர் உயர்வு - அண்ணா பல்கலை அறிவிப்பு!!
பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் திடீர் உயர்வு - அண்ணா பல்கலை அறிவிப்பு!!
பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் திடீர் உயர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம்:

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக்தின் கீழ் நூற்றுக்கணக்கான உறுப்பு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், திடீரென அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை 50% வரையிலும் உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பு தேர்வு கட்டணம் ரூ.150 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அஞ்சல் அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு – நவ.22 நேர்காணல்! மிஸ் பண்ணிடாதீங்க!!

தேர்வு கட்டணம் மட்டுமல்லாமல் இளநிலை தேர்விற்கான கட்டணமும் ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆகவும், ப்ராஜெக்ட் கட்டணமாக ரூ. 600 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.900 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே செமெஸ்டரில் பொறியியல் மாணவர்களுக்கு 9 பாடங்களுக்கான தேர்வுகள் வரைக்கும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தேர்வு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!