அஞ்சல் அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு – நவ.22 நேர்காணல்! மிஸ் பண்ணிடாதீங்க!!
அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு திட்ட நேரடி முகவர் பணியிடத்திற்கான நேர்காணல் நவ.22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
நேர்காணல்:
அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்ட விற்பனைக்கான நேரடி முகவர் பணியிடம் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கான நேர்காணல் வரும் நவ.22 ஆம் தேதி சென்னை தியாகராய நகா், சிவஞானம் சாலையில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற இருக்கிறது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. அரசிடம் கோரிக்கை – போராட்டம் அறிவிப்பு!
விருப்பமும், தகுதியும் பெற்றவர்கள் இந்த நேர்காணலில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளும்படி மத்திய கோட்ட அஞ்சல் அலுவலம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேர்காணலில் கலந்துகொள்ள இருப்பவர்கள் 3 பாஸ்போர்ட் புகைப்படம், வயது சான்று, முகவரி சான்று மற்றும் கல்விச் சான்றுகளை கட்டாயமாக எடுத்து செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.