விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் இனி சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா? வெளியான ஷாக் ப்ரோமோ!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிகை ஆலியா மானஸா நடித்து வரும் சந்தியா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா நடிக்க இருப்பதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
செம்பருத்தி ஷபானா
சமீப காலமாக விஜய் டிவி ரசிகர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்த விஷயம் முக்கிய சீரியல் நடிகர், நடிகைகளின் திடீர் மாற்றம் தான். அதாவது, விஜய் டிவியில் நன்றாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த சில சூப்பர் ஹிட் சீரியல்களில் ரீபிளேஸ்மென்ட் என்ற சில ஒரு விஷயம் நடைபெற்றிருந்தது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன், ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் நடிகர் தர்ஷன், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ நடிகை ரக்ஷிதா என சில முக்கிய கதாப்பாத்திரங்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மார்ச் இறுதிவரை விடுமுறை ரத்து – அரசு அறிவுறுத்தல்!
இப்போது தான் இந்த மாற்றங்களை ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள துவங்கி இருக்கின்றனர். இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் காரணமாக நடிகை ஆலியா மானஸா ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலக இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இது வெறும் வதந்தி என்று ஆலியா மானஸா தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை ஆலியா மானஸாவே இத்தொடரின் சந்தியாவாக நடித்து வருகிறார்.
இருந்தாலும் மீண்டுமாக ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிகை ஆலியா மானஸா நடித்து வரும் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா நடிக்க இருப்பதாக சில எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ காட்சிகள் வலைதளங்களில் வெளியான வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது கூட, ‘ராஜா ராணி 2’ சீரியலில் சில அதிரடியான திருப்பங்கள் நடைபெற இருப்பதாகவும், இனி சந்தியாவாக நடிகை ஷபானா நடிக்க இருப்பதாகவும் ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோ எடிட் செய்யப்பட்டதாக இருந்தாலும் அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.