‘ராஜா ராணி 2’ சந்தியாவாக சவால்களை சந்திக்கும் செம்பருத்தி ஷபானா? அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் விறுவிறுப்பான கதைக்களத்தில் சந்தியாவாக ‘செம்பருத்தி’ நடிகை ஷபானா சந்திக்கும் பல்வேறு போராட்டங்கள் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.
ராஜா ராணி
தற்போது ஸ்வாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ சீரியல் ரசிகர்களின் பேவரைட் ஆன சீரியலாக இருந்து வருகிறது. இத்தொடர், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக படிக்காத கிராமத்து இளைஞனை, படித்த பட்டதாரி பெண் திருமணம் செய்து கொள்ள அதனால் ஏற்படும் சிக்கல்களை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் சந்தியா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை ஆலியா மானஸா மற்றும் நடிகர் சித்து, சரவணன் என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ கணவர், மனைவி – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த ‘ராஜா ராணி 2’ சீரியலின் சந்தியா மற்றும் சரவணன் ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இத்தொடரில் நடித்து வரும் நடிகை ஆலியா மானஸா தற்போது கர்ப்பமாக இருப்பதால் இவர் சீரியலை விட்டு விலகுவதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் ‘ராஜா ராணி 2’ தொடரில் தான் தொடர்ந்து நடிப்பதாகவும், விலகும் எண்ணம் இல்லை என்றும் நடிகை ஆலியா மானஸா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது புது விதமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிகை ஆலியா மானஸாவுக்கு பதிலாக ‘செம்பருத்தி’ நடிகை ஷபானா நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் வெளிவருவதாகவும், அதை எப்படி சந்தியா அதாவது ‘செம்பருத்தி’ ஷபானா சந்திக்க போகிறார் என்பது குறித்தும் சில காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.