ராஜா ராணி 2 சந்தியாவாக உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘செம்பருத்தி’ ஷபானா – ஷாக் ப்ரோமோ!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலின் அடுத்த கதைக்களத்தில் வெளிவரப்போகும் உண்மைகளை சந்தியாவாக ‘செம்பருத்தி’ ஷபானா எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்பது குறித்து வெளியான ப்ரோமோ ரசிகர்களை அதிர்ச்சிக்குளாக்கி இருக்கிறது.
ராஜா ராணி சீரியல்
விஜய் டிவியின் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியலான ‘ராஜா ராணி 2’ பல்வேறு புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் சமீப காலமாக சரவணன் மற்றும் சந்தியா கலந்து கொள்ளும் சமையல் போட்டிகள் விறுவிறுப்பாக வெளியாக மறுபக்கத்தில் சரவணன், சந்தியா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் பார்வையாளர்களை ஈர்த்திருந்தது. இந்த போட்டிகளை முடித்து தற்போது வழக்கமான கதைக்களத்திற்கு திரும்பி இருக்கிறது ‘ராஜா ராணி 2’ சீரியல்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் சர்பிரைஸ் என்ட்ரி கொடுத்த ஸ்ருதி & நாடியா சாங் – ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியா கதாப்பாத்திரத்தில் ஜீ தமிழின் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா நடிக்க இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் இருக்கிறது. அதாவது செம்பருத்தி ஷபானா, ‘ராஜா ராணி 2’ சந்தியாவாக அடுத்து வரப்போகும் சவால்களை எதிர்கொள்ள இருப்பது போல சில எடிட் செய்யப்பட்ட ப்ரோமோக்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் ஒரு ப்ரோமோவில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்தடுத்து வெளிவரப்போகும் உண்மைகள், இதனை சந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று சில வசனங்கள் இடம்பிடிக்க அதில் செம்பருத்தி ஷபானா, சந்தியாவாக காட்டப்பட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு புறத்தில் ‘ராஜா ராணி 2’ சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தாலும், மறு பக்கத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.