நடிகர் ஆர்யனுக்கு சர்பிரைஸ் கொடுத்த ‘செம்பருத்தி’ ஷபானா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
நடிகர் ஆர்யனுக்கு சர்பிரைஸ் கொடுத்த 'செம்பருத்தி' ஷபானா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
நடிகர் ஆர்யனுக்கு சர்பிரைஸ் கொடுத்த 'செம்பருத்தி' ஷபானா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
நடிகர் ஆர்யனுக்கு சர்பிரைஸ் கொடுத்த ‘செம்பருத்தி’ ஷபானா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தமிழ் சின்னத்திரை நடிகை ஷபானா மற்றும் ஆர்யன் திருமணம் தொடர்பான பல வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், ஆர்யனுக்கு சர்பிரைஸ் அளிக்கும் விதமாக நடிகை ஷாபனா வெளியிட்ட நிச்சயதார்த்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷபானா

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் ஆர்யன் மற்றும் ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் 11ம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் ஆனது இந்து முறைப்படி மிகவும் எளிமையாக நடைபெற்றது. என்றாலும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் இந்த நட்சத்திர தம்பதியின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் ஸ்கூல் விசிட் – வைரலாகும் வீடியோ!

தொடர்ந்து திருமணம் முடித்த கையோடு, பாண்டிச்சேரியில் தேனிலவு சென்றிருந்த தம்பதி மீண்டுமாக சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறது. இப்படி இருக்க, சமீப காலமாக நடிகை ஷபானா மற்றும் ஆர்யன் திருமணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக நடிகை ஷபானா மற்றும் ஆர்யனுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனா – குவியும் லைக்குகள்!

இந்த தகவல்களை கேள்விப்பட்ட நடிகர் ஆர்யன் இது வெறும் வதந்தி என்று விளக்கம் கொடுத்தார். தவிர நடிகை ஷபானா தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த விவாகரத்து வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஆர்யன் மற்றும் ஷபானா இருவரும் சந்தோஷமாக இருக்கும் நிச்சயதார்த்த வீடியோவை நடிகை ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!