விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் ஸ்கூல் விசிட் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் சுஜிதாவின் ஸ்கூல் விசிட் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் சுஜிதாவின் ஸ்கூல் விசிட் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் ஸ்கூல் விசிட் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சுஜிதா, தான் படித்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சில அழகிய தருணங்களை ஒரு வீடியோ பதிவாக வெளியிட அது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சுஜிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் மக்களால் நன்கு அறியப்பட்டவர் நடிகை சுஜிதா. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் தனம் அண்ணியாக ஒவ்வொருவரின் இல்லங்களிலும் இடம் பிடித்திருக்கும் நடிகை சுஜிதா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதாவது, கைக்குழந்தையாக இருக்கும் போதில் இருந்து தனது சினிமா பயணத்தை துவங்கிய நடிகை சுஜிதா தற்போது சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.

ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனா – குவியும் லைக்குகள்!

குறிப்பாக சுஜிதா, அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருந்தாலுமே நிஜத்தில், அதாவது திரைக்கு பின்பாக எந்தவொரு ஆர்ப்பாட்டமும், அலட்டலும் இவரிடம் இருக்காது. இப்படி சீரியலிலும் சரி, நிஜத்திலும் சரி எப்போதும் ஒன்று போல இருக்கும் நடிகை சுஜிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சினிமா, சின்னத்திரையை தாண்டி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சுஜிதா ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு, ஹோம் டூர், சொந்த ஊர் விசிட் என பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலின் வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் – குவியும் பாராட்டுக்கள்!

அந்த வகையில் தற்சமயம் தனது பள்ளிப்பருவ கால நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார் நடிகை சுஜிதா. அதாவது, சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்திருந்த நடிகை சுஜிதா தற்போது தான் படித்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார். அந்த வகையில் அப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை சுஜிதா அங்கு சிறப்பு உரை ஆற்றி இருக்கிறார். இது தொடர்பான வீடியோவை அவர் யூடியூப் சேனலில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!