ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனா – குவியும் லைக்குகள்!

0
ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த 'பாரதி கண்ணம்மா' ஃபரீனா - குவியும் லைக்குகள்!
ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த 'பாரதி கண்ணம்மா' ஃபரீனா - குவியும் லைக்குகள்!
ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனா – குவியும் லைக்குகள்!

பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஃபரீனா தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்து உள்ளார். இவரின் இந்த பதிவிற்கு சிறிது நேரத்திலேயே அதிக லைக்குகள் குவிந்து வருகிறது.

ஃபரீனாவின் வாழ்த்து:

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரின் வில்லி வெண்பாவாக நடித்து வரும் நடிகை ஃபரீனா, இணையத்தில் எப்போதும் வலம் வரும் ஒரு பிரபல நடிகை. தனது பிரசவத்தை ஒட்டி தற்போது சில வாரங்களாக அவர் படப்பிடிப்பில் இருந்து ஓய்வில் இருக்கிறார். ஆனால் முழுதாக ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள துவங்கிவிட்டார். இவரின் விடுமுறையை சமாளிக்கும் வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலின் வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் – குவியும் பாராட்டுக்கள்!

வெண்பா கதாபாத்திரம் சிறையில் இருப்பது போல் அமைக்கப்பட்டு, அவரது ஜாமினிற்காக அவரின் கூட்டாளிகள் சாந்தி மற்றும் மாயாண்டி இருவரும் முயன்று வருவது போல் காட்சிகள் வருகிறது. சீரியலில் வெண்பாவின் ரீஎன்ட்ரி எப்போது என்று பல ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரத்தில் ஓய்வில் இருந்து ஷூட்டிங்கிற்கு திரும்பி விட்டதாக ஃபரீனா பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் இவர் சீரியலில் மீண்டும் விரைவில் தோன்றுவர் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர்.

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘செம்பருத்தி’ ஷபானாவின் பதிவு – ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஆனால் ஓய்விற்கு பிறகு முதலில் சீரியலில் இல்லமால் கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் ஃபரீனா ரீஎன்ட்ரி கொடுக்கிறார். இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஃபரீனா வெளியிட்ட அனைத்து பதிவுகளும் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் வாரத்தில் உள்ளதால் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை ஃபரீனா தெரிவித்துள்ளார். இவரின் பதிவு வெளியான சில நிமிடங்களில் அதிக ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், ஃபரீனா மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதால் அவருக்கும் வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!