‘செம்பருத்தி’ கார்த்திக் ராஜிற்கு ஷபானாவின் பிறந்தநாள் வாழ்த்து – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

0
'செம்பருத்தி' கார்த்திக் ராஜிற்கு ஷபானாவின் பிறந்தநாள் வாழ்த்து - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
'செம்பருத்தி' கார்த்திக் ராஜிற்கு ஷபானாவின் பிறந்தநாள் வாழ்த்து - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
‘செம்பருத்தி’ கார்த்திக் ராஜிற்கு ஷபானாவின் பிறந்தநாள் வாழ்த்து – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் கார்த்திக் ராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், நடிகை ஷபானா அவருக்கு வாழ்த்து கூறி வெளியிட்ட பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகர் கார்த்திக்

தமிழ் சின்னத்திரை சீரியல் மூலம் மக்களுக்கு பரீட்சயப்பட்ட நடிகர் கார்த்திக் ராஜ், விஜய் டிவியின் ‘கானா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து ‘ஆபிஸ்’ என்கிற தொடரில் நடித்திருந்த நடிகர் கார்த்திக் ராஜிற்கு இந்த சீரியல் நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. தொடர்ந்து சில காலம் சீரியலை விட்டு விலகி இருந்த நடிகர் கார்த்திக் மீண்டுமாக ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலின் ஆதியாக மக்களை மகிழ்விக்க துவங்கினார்.

கோபி ஏமாற்றுவதை கண்டுபிடிக்கும் பாக்கியா, ஆறுதல் சொன்ன எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி’ எபிசோட்!

இத்தொடரில் ஆதி என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் கார்த்திக்கிற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்து வந்தது. குறிப்பாக இத்தொடரின் ரீல் ஜோடியான ஆதி, பார்வதிக்கு சொல்லக்கூடிய அளவுக்கு ரசிகர்கள் உருவானார்கள். இவர்களது ரொமான்டிக் காட்சிகள் சீரியலை தவிர்த்து, சமூக வலைதளங்களிலும் பிரபலமாக இருந்து வந்தது. தவிர ‘செம்பருத்தி’ சீரியலின் ஆதி, பார்வதி ரீல் ஜோடியான நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை ஷபானாவுக்கு இந்த சீரியல் பல விருதுகளை பெற்றுத்தந்தது.

மீனாவிடம் உண்மையை போட்டு உடைக்கும் ஐஸ்வர்யா, கோவப்பட்ட தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இப்படி TRP ரேட்டிங்கில் எப்போதும் முதன்மையான இடத்தை பிடித்து வந்த ‘செம்பருத்தி’ சீரியல், நடிகர் கார்த்திக்கின் திடீர் விலகலுக்கு பின்னர் மந்தமாக துவங்கியது. என்றாலும் பல அதிரடியான திருப்பங்களுடன் தற்போது வெளியாகி கொண்டிருக்கும் ‘செம்பருத்தி’ சீரியல் சமீபத்தில் 1000 எபிசோடுகளை கடந்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்நிலையில் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அந்த வகையில் நடிகர் கார்த்திக்கின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை ஷபானா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகை ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் கார்த்திக் உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்திருக்கிறார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. மேலும் கார்த்திக்கின் ரசிகர்கள் அவருக்கு வலைதளங்கள் மூலமாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!