மாநிலம் முழுவதும் வார இறுதி ஊரடங்கு ரத்து – அரசு அதிரடி அறிவிப்பு!

0
மாநிலம் முழுவதும் வார இறுதி ஊரடங்கு ரத்து - அரசு அதிரடி அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் வார இறுதி ஊரடங்கு ரத்து - அரசு அதிரடி அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் வார இறுதி ஊரடங்கு ரத்து – அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவல் தாக்கம் காரணமாக கர்நாடகாவில் வார இறுதி நாள் ஊரடங்கு அமலில் இருந்து. இருப்பினும் நேற்று, முதல் மந்திரி பசவராஜ் தலைமையில் நடந்து முடிந்த ஆலோசனை கூட்டத்தில், வார இறுதி நாள் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .

அரசு அதிரடி அறிவிப்பு:

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், தொற்று பாதித்த அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம், மகாராஷ்டிரா ,கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொற்றின் வேகம் தீவிரமடைந்ததால் மாணவர்களின் நலன் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டணம் செலுத்த கால அவகாசம்!

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் நோய் தொற்று காரணமாக ஜனவரி 7ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முதல் மந்திரி பசவராஜ் தலைமையில்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிர படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஜனவரி 24ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு ஒப்புதல்!

இந்த வகையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தாலும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், இதுவரை அமலில் இருந்த வார இறுதி நாள் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இரவு ஊரடங்கு வழக்கம்போல் அமலில் இருக்கும். பெங்களூரு நகரில் தொற்று பரவல் அதிகம் இருப்பதால் வரும் 29-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலம் முழுவதும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!