திருமணத்திற்கு பின் மீண்டும் ‘செம்பருத்தி’ சீரியல் ஷூட்டிங்கில் இணைந்த ஷபானா – வைரல் போட்டோ!

0
திருமணத்திற்கு பின் மீண்டும் 'செம்பருத்தி' சீரியல் ஷூட்டிங்கில் இணைந்த ஷபானா - வைரல் போட்டோ!
திருமணத்திற்கு பின் மீண்டும் 'செம்பருத்தி' சீரியல் ஷூட்டிங்கில் இணைந்த ஷபானா - வைரல் போட்டோ!
திருமணத்திற்கு பின் மீண்டும் ‘செம்பருத்தி’ சீரியல் ஷூட்டிங்கில் இணைந்த ஷபானா – வைரல் போட்டோ!

செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்துள்ள நிலையில், அவர் மீண்டும் செம்பருத்தி சீரியல் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார் என்பதை உறுதிபடுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

செம்பருத்தி ஷபானா:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட தொடர் செம்பருத்தி. இதில், வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடித்த ப்ரியாராமன் முதல் முறையாக சின்னத்திரைக்கு நடிக்க வந்தார். மிகவும் பாரம்பரியமான ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக அவர் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் கம்பீரமாகவும், மிடுக்காகவும் நடித்துள்ளார். அவரது இரண்டு மகன்களுக்கும் நல்ல பெரிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் தான் மனைவியாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் படி கதை இருக்கும். ஆனால் அவரது மூத்த மகன் வீட்டின் சமையல் வேலை செய்யும் பார்வதியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

காணாமல் போன மீனாட்சியை தேடி அலையும் வெற்றி, திருமணம் நடக்குமா? “மெகா சங்கமம்” ப்ரோமோ!

இதனால் அவர்களது வாழ்கை எவ்வாறு மாறுகிறது என்று கதை சென்று கொண்டிருக்கிறது. இதில், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஷபானா அறிமுகம் செய்யப்பட்டார். இந்த செம்பருத்தி சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் ஷபானா. சின்னத்திரை ஹீரோயின்களில் இவ்வளவு குறுகிய காலத்தில் அதிக புகழடைந்த நடிகைகளில் ஷபானா முக்கிய இடத்தில உள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக ஷபானா கடந்த 11ம் தேதி பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வந்த ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மீண்டும் முதலிடத்தில் ‘பாரதி கண்ணம்மா’ – விஜய் டிவி சீரியல்களின் TRP பட்டியல்! ரசிகர்கள் உற்சாகம்!

மிகவும் பிரபலமாகி இருக்கும் காலத்தில் பொதுவாக திருமணம் செய்து கொள்வதை நடிகைகள் தவித்து விடுவார்கள். ஆனால் ஷபானா காதலை அறிவித்து சில மாதங்களிலேயே, அதுவும் புகழின் உச்சியில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டதை சின்னத்திரை முழுவதும் பேசி வந்தனர். அதையும் மீறி இந்த நட்சத்திர ஜோடிகளின் திருமண கலாட்டாக்கள் அனைத்தும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், ஷபானா திருமணத்திற்கு மீண்டும் செம்பருத்தி சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக, ஷபானா உடன் நடிக்கும் நடிகை தீப்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படத்தில், செம்பருத்தி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்வதி கெட்டப்பில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here