அகிலா சம்மதத்துடன் நடந்த ஆதி, பார்வதியின் 2வது திருமணம் – அதிரடி திருப்பங்களுடன் “செம்பருத்தி” சீரியல்!

0
அகிலா சம்மதத்துடன் நடந்த ஆதி, பார்வதியின் 2வது திருமணம் - அதிரடி திருப்பங்களுடன்
அகிலா சம்மதத்துடன் நடந்த ஆதி, பார்வதியின் 2வது திருமணம் - அதிரடி திருப்பங்களுடன் "செம்பருத்தி" சீரியல்!
அகிலா சம்மதத்துடன் நடந்த ஆதி, பார்வதியின் 2வது திருமணம் – அதிரடி திருப்பங்களுடன் “செம்பருத்தி” சீரியல்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி சீரியல்களில் ஒன்றான “செம்பருத்தி” சீரியலில், ரசிகர்கள் எதிர்பார்க்காத வண்ணம் பல திருப்பங்கள் நடந்துள்ளது. அகிலாண்டேஸ்வரி தன்னுடைய முழு மனதோடு ஆதி பார்வதி கல்யாணத்தை நடத்தி வைக்கிறார்.

செம்பருத்தி சீரியல்:

செம்பருத்தி சீரியல், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் 1200 எபிசோடுகளை தாண்டி முன்னணி சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிக்கடவூர் வம்சத்தை சேர்ந்த அகிலாண்டேஸ்வரியின் மூத்த மகன் ஆதி சாதாரண வேலைக்காரியை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார். அதனால் அவர் அனைத்து வசதிகளையும் இழந்து வீட்டை விட்டு வெளியேறி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

விரைவில் தொடங்க இருக்கும் “கனா காணும் காலங்கள் சீசன் 2” – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அகிலாண்டேஸ்வரி பார்வதியை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா என்பதே இந்த சீரியலின் திருப்பமாக இருந்தது. இந்நிலையில் அகிலாண்டேஸ்வரியின் பாசம் மற்றும் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என பார்வதி விரதம் இருக்க, அகிலாண்டேஸ்வரி இறங்குவதாக இல்லை. அதனால் ஆதிக்கு இரண்டாவது திருமணம் செய்ய பார்வதி முடிவு செய்கிறார். அதற்காக கீர்த்தனா என்ற பெண்ணைப் பார்த்து பேசி முடித்து கல்யாணமும் நடக்கப் போகிறது. ஆனால் கடைசி நேரத்தில் பார்வதியை விவாகரத்து செய்து அவள் கழுத்தில் இருக்கும் தாலி இறங்கினால் தான் என் கழுத்தில் தாலி ஏறும் என கீர்த்தனா சொல்கிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் 2வது முறை கர்ப்பமான கண்ணம்மா – வைரல் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

அதற்கும் பார்வதி சம்மதம் சொல்லி கண்ணீருடன் தனது கழுத்தில் உள்ள தாலியை கழற்ற போகிறாள் பார்வதி. அப்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அகிலாண்டேஸ்வரி தடுத்து நிறுத்தி விடுகிறார். இது எல்லாமே அகிலாண்டேஸ்வரியின் திட்டம் தான் “பார்வதி நீ என்னோட மனசார பரிபூர்ண சம்மதத்தை தானே எதிர்பார்த்த… அது கிடைக்காதுன்னு நீயே முடிவு பண்ணி ஆதிக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க துணிஞ்சிட்ட” அதனால் நான் உங்களது திருமணத்திற்கு மனதார சம்மதிக்கிறேன் என சொல்லி ஆதியை பார்வதி கழுத்தில் தாலி கட்ட சொல்கிறார். ஆதியும் பார்வதியும் இணைந்த சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!