விரைவில் தொடங்க இருக்கும் “கனா காணும் காலங்கள் சீசன் 2” – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
விரைவில் தொடங்க இருக்கும்
விரைவில் தொடங்க இருக்கும் "கனா காணும் காலங்கள் சீசன் 2" - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விரைவில் தொடங்க இருக்கும் “கனா காணும் காலங்கள் சீசன் 2” – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் டிவியில் 90’ஸ் கிட்ஸ் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக “கனா காணும் காலங்கள்” சீரியல் இருந்தது. இந்த சீரியலில் தற்போது இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

கனா காணும் காலங்கள்:

பள்ளி பருவ நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்த விஜய் டிவி “கனா காணும் காலங்கள்” சீரியல் தற்போது வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இந்த சீரியலில் நடித்த நடிகர், நடிகைகள் பலர் தற்போது சின்னத்திரையிலும் வெள்ளித் திரையிலும் கலக்கி வருகின்றனர். இந்த சீரியல் மெகா ஹிட் அடித்த நிலையில் இதன் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வ ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பல புது முகங்கள் களமிறங்கி இருக்கின்றனர்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் 2வது முறை கர்ப்பமான கண்ணம்மா – வைரல் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

இந்த சீசனில் உற்சாகத்திற்கு பஞ்சமில்லாமல் ப்ரோமோ வெளியான நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தேவையான சமூக கருத்துக்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. கடந்த சீசனில் மாணவர்களின் மனநிலை மற்றும் வாழ்க்கையை அழகாக இந்த தொடரில் காட்டப்பட்டது. மேலும் பள்ளி பருவ காதல் குறித்தும் பக்குவத்துடன் கதை அமைக்கப்பட்டது. இந்த சீசனில் இந்த காலத்திற்கு ஏற்றார் போல புதுமை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு பின் குழந்தையாக மாறிய ‘செம்பருத்தி’ ஷபானா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது வெளியான ப்ரோமோவில் ஆசிரியர்கள் கூட புது முகங்களாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளனர். அதே போல சீரியலில் அழகான ஆசிரியர் ஒருவரை காட்டி இருக்கின்றனர். இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகாது. அதற்கு மாற்றாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!