“பாரதி கண்ணம்மா” சீரியலில் 2வது முறை கர்ப்பமான கண்ணம்மா – வைரல் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பது போல படப்பிடிப்புத்தள வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
“பாரதி கண்ணம்மா” சீரியலில் பல திருப்பங்கள் வெளியாகி வருகிறது. பாரதி, கண்ணம்மா இருவரும் சேர்ந்து வாழ தொடங்கி இருக்கும் நிலையில், ஜெயிலில் இருந்து வெண்பா வெளியே வந்துள்ளார். அவருக்கு பாரதி கண்ணம்மா பற்றிய விஷயம் தெரிய வந்த நிலையில் அவர் பாரதி மீது பயங்கர கோவமாக இருக்கிறார். இந்நிலையில் பாரதி, கண்ணம்மாவை பிரிக்க பல திட்டங்களை தீட்டி வருகிறார். பாரதியை எப்படியாவது மனதை மாற்ற வேண்டும் என சௌந்தர்யா திட்டமிடுகிறார்.
பாரதி கண்ணம்மாவின் 10வது திருமண நாள் வருவதால் அதில் இருவரையும் சேர்த்து பூஜைக்கு ஏற்பாடு செய்கிறார். அதில் கலந்து கொள்ள பாரதியை சம்மதிக்க வைக்கிறார் சௌந்தர்யா. பூஜை நடக்கும் போது ஹேமாவும், லக்ஷ்மியும் வெளியே அழைத்து செல்ல சில ஏற்பாடுகளை சௌந்தர்யா செய்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்க பாரதிக்கு கண்ணம்மா மீது இரக்கம் வருகிறது. இந்நிலையில் அடுத்து பெரிய ட்விஸ்ட் இந்த சீரியலில் வர இருக்கிறது.
ஐஸ்வர்யாவிற்கு போட்டியாக நைட்டி போடும் மீனா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அது குறித்த வீடியோ ஒன்றை கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் வினுஷா வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. அதனால் பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ தொடங்கி கண்ணம்மா மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இன்னும் இந்த சீரியலில் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.