விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் “சரவணன் மீனாக்ஷி சீசன் 4” – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி சீரியல்கள் என்றாலே மக்களிடம் தனி மதிப்பு உண்டு. மாபெரும் வெற்றி பெற்ற பல சீரியல்கள் இருக்கும் நிலையில் அதில் ஒன்றான “சரவணன் மீனாக்ஷி” சீசன் 4 விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
சரவணன் மீனாக்ஷி:
தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக இருக்கிறது. மாபெரும் வெற்றி கண்டு மக்கள் மனதில் பல ஆண்டுகளாக இருக்கும் பல சீரியல்கள் இருக்கின்றன. அதில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி மதிப்பு உண்டு. கனா காணும் காலங்கள், காதலிக்க நேரமில்லை என பல சீரியல்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் சரவணன் மீனாக்ஷி.
முதல் சீசனில் மிர்ச்சி செந்தில் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஜா ஆகியோர் சரவணன் மற்றும் மீனாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தனர். அவர்களது கெமிஸ்ட்ரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இருவரும் சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலமாக திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் அந்த சீரியல் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. அதில் நடிகர் கவின் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை ரட்சிதா களமிறங்கினார். இரண்டாவது சீசனும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
விரைவில் தொடங்க இருக்கும் “கனா காணும் காலங்கள் சீசன் 2” – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
அடுத்து மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டது. அதில் நடிகர் ரியோ மற்றும் மீண்டும் மீனாக்ஷியாக நடிகை ரட்சிதா நடித்தனர். இந்நிலையில் தற்போது நான்காவது சீசன் தொடங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் புது முக நடிகர் நடிகை களமிறங்க இருக்கின்றனர். இந்த சீசனும் தொடங்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.