ஏப்ரல் 4 தொடங்கி காலை 7.30 மணிமுதல் 11.30 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
ஏப்ரல் 4 தொடங்கி காலை 7.30 மணிமுதல் 11.30 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஏப்ரல் 4 தொடங்கி காலை 7.30 மணிமுதல் 11.30 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஏப்ரல் 4 தொடங்கி காலை 7.30 மணிமுதல் 11.30 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் காலை 7.30 மணியிலிருந்து 11.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வந்ததையடுத்து தற்போது வழக்கமான முறையில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நடப்பு கல்வியாண்டு இந்த மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் கோடைக் காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 4ம் தேதி முதல் அரைநாள் மட்டுமே பள்ளிகளை நடத்த ஆந்திரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.

TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வர்கள் கவனத்திற்கு!

இது தொடர்பாக அம்மாநில கல்வி அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் நேற்று (ஏப்ரல்.1) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஏப்ரல் 4ம் தேதி முதல் அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். இந்த முடிவானது தற்போதுள்ள கோடைக் காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குழந்தைகளை கோடைகால துயரத்தில் இருந்து காப்பாற்ற பள்ளிகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை செயல்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் அம்மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் துவங்கும் என்றும், இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மே 6 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அம்மாநிலத்தில் வரும் ஏப்ரல் 4 முதல் பள்ளிகள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை செயல்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் கூட, கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here