தமிழகக்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி தொலைக்காட்சி மேம்படுத்தல் குறித்து இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பள்ளிகள் திறப்பு ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. வகுப்புகள் ஆன்லைன் மூலமும், அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமும் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனால் புதிய கல்வியாண்டு தொடங்கியும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 30 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் – ஜூன் 28 வரை முழு ஊரடங்கு?
இதனால் நோய் பரவல் சற்று குறைந்துள்ளது. மேலும் ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தற்போது 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை 2021- 22 ம் கல்வி ஆண்டுக்கான பாடநூல் வழங்கும் திட்டத்தையும், கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் ஒளிபரப்பப்படும் தொகுப்பையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
TN Job “FB
Group” Join Now
மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். அதில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி தொலைக்காட்சி மேம்படுத்தல், பள்ளிகள் திறப்பு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. ஏற்கனவே பள்ளிகள் திறக்க கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனால் விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.