தமிழகத்தின் 30 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் – ஜூன் 28 வரை முழு ஊரடங்கு?

1
தமிழகத்தின் 30 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் - ஜூன் 28 வரை முழு ஊரடங்கு?
தமிழகத்தின் 30 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் - ஜூன் 28 வரை முழு ஊரடங்கு?
தமிழகத்தின் 30 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் – ஜூன் 28 வரை முழு ஊரடங்கு?

தமிழகத்தில் ஜூன் 28 ஆம் தேதிக்கு மேல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவைகள் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பேருந்து சேவைகள்

கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக மே 10 ஆம் தேதி முதல் நீட்டிக்கப்பட்டு வருகிற முழு ஊரடங்கு ஜூன் 21 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கமானது மேலும் ஒரு வார காலத்துக்கு, அதாவது ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போதுள்ள முழு ஊரடங்கை மேலும் தொடருவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின், மருத்துவ வல்லுனர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் விரைவில் நடக்கும் – மத்திய அரசு தகவல்!

அந்த வகையில் மாநிலம் முழுவதும் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நகைக்கடைகள், துணிக்கடைகள் மற்றும் பேருந்து சேவைகள் மீண்டுமாக துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த ஒரு வார காலத்தில் கிட்டத்தட்ட 8 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் தினசரி பாதிப்பானது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் பாதிப்பு குறைவாக உள்ள 30 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 50% பயணிகளுடன் மாவட்டங்களுக்கு உள்ளே பேருந்து போக்குவரத்து சேவைகள் மீண்டுமாக துவங்கலாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக, பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அரசு அனுமதி அளிக்கும் என கூறப்படுகிறது. அதே போல கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!